வாசகர்வட்டம் - 23-8-09 சிங்க்கை வலைப்பூபதிவாளர்களுடன் ஒரு சந்திப்பு

வாசகர் வட்டம் இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள்

நாள்: 23.08.2009 (ஞாயிறு)

நேரம்: மாலை 4.30மணிக்கு

இடம்: அங்மோ கியோ வட்டார பொது நூலகம் தக்காளி அறை (இரண்டாவது தளம்)

இருவர் சந்திக்கும்போது தான் காதல், காமம், குரோதம், என ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு இந்த பிரபஞ்சம் மெல்ல விரிவடைகிறது. இவர்களும் சந்திக்கிறார்கள,; விரல் நுனிக்குள் சுருங்கிவிட்ட இணையப் பெருவெளியில் சந்திப்பதுடன் சிந்திக்கவும் செய்கிறார்கள். அறிவியல், ஆன்மீகம், இலக்கியம், அரசியல், சமூகம், மொழி, பண்பாட்டுடன் நட்பின் கரங்களை உயர்த்திப் பிடிக்கும், இவர்களின் இணைய உலக பயண எழுத்தின் நுட்பத்துடன் சந்தித்த தளங்களை….. சிங்கைவாழ் பதிவர்களான கோவி.கண்ணன் அவர்கள் குழலி அவர்கள் அப்பாவி முருகேசன் அவர்கள் முகவை ராம் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கின்றனர். இவர்களுடன் 15-ற்கும் மேற்பட்ட வலைதள எழுத்தாளர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு கலந்துரையாடலிலும் பங்கு பெறவிருக்கின்றனர். அனுமதி இலவசம் அன்புடன் அழைப்பது வாசகர் வட்டம் நண்பர்கள். சிங்கை பதிவர்கள் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு

www.singaporetamilblogers.blogspot.com

www.sgtamilbloggers.com

www.tamilveli.com