அ. முத்துலிங்கம் கதைகளைப் பற்றி பாண்டிதுரை

மீளா பிரமிப்பினூடே படிந்துவிட்ட இழப்புகள். பாண்டித்துரை இதற்கு முன்பு அ.முத்துலிங்கத்தின் கட்டுரைதொகுப்புகளை வாசித்திருக்கிறேன். இவரின் சிறுகதை தொகுப்பு என்பது இதுவே முதல் முறை ஆனால் கட்டுரைகளின் ஈர்ப்பு ஏனோ சிறுகதைகளுக்குள் இல்லை. அக்கா – 1964 (இந்த வருடம் சரியா என்பது தெரியவில்லை) திக்சக்கரம் - 1995 வம்ச விருத்தி – 1996 வடக்கு வீதி – 1998 வாசகர் வட்டத்திற்காக நான் வாசித்த மகாராஜாவின் ரயில் வண்டி – 2001 இவரது ஐந்தாவது சிறுகதை தொகுப்புஇ இதற்கு முன்னரும் பின்னரும் வெளிவந்த சிறுகதை தொகுப்புகளை நான் படித்ததில்லை. சிறுகதையை படிப்பதற்கு முன்பு தலைப்பு பற்றிய பிரக்ஞையில் மகாராஜாவின் வண்டி என்றால் எப்படியெல்லாம் இருக்கும் என்ற கற்பனையில் பிரமிப்புடன் மிதந்து கிடந்தேன். கதையை வாசிக்க துவங்கியபோதுஇ ஒருவித சலிப்பு ஏற்பட்டது. கதையை நகர்த்தல் ஒரு துப்பறியும் கதைசொல்லல் போன்ற பிம்பம் என்னுள் படிந்ததேஇ ஆனால் பிற கதைகளை வாசிக்க வாசிக்க மாற்றம் ஏற்பட்டது. ஒட்டு மொத்த கதைகளை படித்து முடிக்கும் போது பிரமிப்பு ஏற்படுதைவிடஇ ஒரு வறண்ட மனநிலையில் ஏற்படும் சலிப்பே தோன்றிமறைந்தது. எல்லாக்கதைகளின் முடிவிலும் ஒவ்வொரு மனிதனுக்குள் ஒரு இழப்பு படிந்துபோய்கிடக்கிறது. இருபது கதைகள் கொண்ட தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமான அல்லது மனதிற்கு நெருக்கமான கதை என்றுஇ “தில்லை அம்பலப் பிள்ளையார் கோவில”; கதையை சொல்லலாம் பொன்னி எனும் வேலைக்காரச்சிறுமி காணமல் போவதிலிருந்து துவங்கிஇ அதன் தொடர்சியாக நிச்சயிக்கப்பட்ட தில்லை அம்பலப் பிள்ளையார் கோவிலுக்கு சென்று அங்கு இந்த கதை முழுவதும் பிண்ணப்பட்ட இரண்டு சகோதர்களில் இளையவன் இறந்து போவதோடு முடிகிறது. இரண்டு சகோதர்களில் மூத்தவனின் பார்வையில் சொல்லப்பட்ட கதையில் இடம் பெரும் சில சொல்லாடல்களை இப்போது பார்ப்போம். ‘’அந்த மார்பிள்களை நான் அபகரிப்பதற்கு பலமுறை முயன்று தோல்வியுற்றிருந்தேன். எனக்கு எரிச்சலாக வந்தது‘’. ‘’அங்கே கறுப்புப் புழுவுக்கு பாலாபிஷேகம் நடந்துகொண்டிருந்தது. என்னைக் கண்டதும் ‘பழிகாரா இன்னும் நீ உடுக்கவில்லையா ? கார் வரப்போகிறது ஓடு ஓடு என்றாள் ‘’. ‘’நான் எப்போழுதாவது கார் ஓட்டினால் அப்படி ஒரு தொப்பி அணிந்து சாய்ந்து நின்று பீடி குடிக்க வேண்டும் என்று உடனேயே தீர்மானம் எடுத்தேன் ‘’. ‘’எனக்கும் பொன்னிக்கும் இடையில் தலையைக் கொடுத்து தம்பியும் எட்டிப்பார்த்தான். ஒப்பந்தத்தை மீறுகிறான். ஒரு குட்டு வைத்தேன். உலகம் நேரானது‘’. ‘’வுட்போர்டில் நின்றபடி ஒரு கை உள்ளே பிடிக்க மறு கை வெளியே தொங்க சின்ன மாமா சிகை கலைய அங்கவஸ்திரம் மிதக்க ஒரு தேவதூதன்போல பறந்து வந்தார். இந்த தருணத்தில் எனக்கு சின்ன மாமாவிடம் இருந்த மதிப்பு பன்மடங்கு பெருகியது. ‘’. ‘’கோயில் வந்தபோது எனக்கு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. அது ஒரு சிறிய கோவில். ஒரு குருக்களும் ஒரு மாடும் ஒரு சொறிநாயும் இரண்டு பிச்சைக்காரர்களும்தான் அதன் சொந்தக்காரர்கள் ‘’. ‘’பெற்றோர் பார்க்காத சமயத்தில் அவள் கோவில் நாயிடம் விளையாட நெருங்கினாள். அது உர்ர் என்று அதிருப்தியாக உறுமியது. சிறிது பின்வாங்குவதும் அணுகுவதுமாக இருந்தாள் அவளுடைய கெண்டைக் கால்களை நாயினுடைய கூரிய பற்கள் சந்திக்கும் தருணத்துக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன் அந்த குட்டி சந்தோஷமும் அவளுடைய தகப்பன் திடீரென்று நாயை விரட்டியதால் கெட்டுப்போனது‘’. ‘’முழங்கால் மூட்டில் ஏற்பட்ட பாவாடை நீக்கலுக்குள் நான் பார்த்துவிடாமல் இருக்க தன்னுடைய பின்பக்கம் என்னுடைய முகத்துக்கு நேராக வரும்படி பிரயத்தனமாகத் திருப்பி வைத்தாள் ‘’. ‘’இன்னும் கரியாக ஒரு நிமிடத்தில் இவன் இறந்துவிடுவான் என்பது தெரியாமல் நான் அந்த மார்பிள்களை வாங்கி பத்திரப்படுத்தினேன் ‘’. ‘’அண்ணா நீ நீந்துவாயா? ஏன்றான் தீடிரென்று. உலகத்தில் உள்ள சகல கலைகளிலும் நான் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று அவன் நினைத்தான் ‘’. ‘’எனக்கு கோபம் வந்தது. இவன் அளவுக்கு அதிகமாகக் குளத்தை அனுபவிப்தை நான் விரும்பவில்லை. இவன் செய்வதிலும் பார்க்க கூடுதலான ஒரு யுக்தியை நான் செய்துகொண்டே இருக்கவேண்டும். ‘’அப்போது என் கண்முன்னே கணுக்கால் வெள்ளத்தில் அவன் சரிந்துகொண்டிருந்தான். கனவிலே நடப்பதுபோல ஈர்க்கப்பட்டு அதையே பார்த்தேன். அவன் அப்படித் தத்தளித்தபோது எட்டிக் கைகளை கொடுத்திருந்தாலோ சத்தம் எழுப்பியிருந்தாலோ போதும். நான் செய்யவில்லை விறைத்துப்போய் ஒரு நிமிடம் வரைக்கும் அசையாமல் அங்கே தோன்றிய நீர்ச்சுழலைப் பார்த்தவாறு நின்றேன். ஒரு மந்திரம்போல அவன் சிரித்தபடி கைகொட்டி எழும்புவான் என்ற நினைப்பு எனக்குள் இருந்தது‘’. ‘’அதற்கு பிறகுதான் ஓவென்று கத்திக்கொண்டு அம்மாவிடம் ஓடியதாக ஞாபகம் ‘’. ‘’தூங்குவதுபோலத் தம்பியை பக்கவாட்டில் இரண்டு ககைளிலும் ஏந்தியபடி அவர்நடந்து வந்து நடுஅறையில் நடுக்கட்டிலில் கிடத்தினார். திடீரென்று அந்த அறையில் இருந்த காற்றை யாரோ அகற்றிவட்டார்கள். நான் வெளியே ஓடிவந்து மூச்சுவிட்டேன் ‘’. இப்போது நான் சொன்னவையெல்லாம் இந்த கதையில் வரும் இந்த கதையை சொல்லிச்செல்லும் மூத்த சிறுவனின் எண்ணங்கள் சார்ந்தவை . இவன் எந்த குணாதிசயங்களை உள்ளடக்கியவன் என்ற அனுமானத்திற்கு வாசகனை இட்டுச் செல்ல உதவுபவை இரண்டு சகோதர்களுக்கு இடையேயான பிணைப்பை கதை முழுமைக்கும் காணாலாம். இயல்பாக இரு சகோதர்கள் இருக்கும் வீடுகளில் அவர்களுக்குள் ஏற்படும் போட்டிஇ தனக்கென்று பாதுகாத்து வரும் பொக்கிஷங்கள்இ பிரச்சினைகளின் தோற்றுவாயை மறைத்தல் என்று சிறுபிராயத்தை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். மூத்த சிறுவன் நிறைய இடங்களில் அவனின் எண்ணங்கள் சாரந்து பிரமிக்கவைக்கிறான். கதைமுழுமைக்கும் மூத்த சிறுவனுக்குள் ஒரு வித குருரத்தன்மை நிரம்பியிருக்கிறது. இந்த குருரம் இளம்பிராயத்தில் பலருக்குள் ஏற்படக்கூடிய ஒன்றுதான் பின்னொருநாள் நினைக்கும்போதுஇ பலரும் இப்படியெல்லாமா இருந்திருக்கிறோம் என்றுஇ நம்மீதான கோபத்தை பரிதாபத்தை தோற்றுவிக்கும.; சிலருக்குள் இத்தகைய குருரங்கள் வாழ்க்கை முழுமைக்கும் நிரம்பிவிடுகிறது. ‘நாளை'’ சிறுகதை ஒரு கிராம அழிவிலிருந்து தப்பித்து ஒருவேளை உணவுக்காய் நீண்ட தொலைவு அலைந்து அகதிமுகாமில் தங்கவைக்கப்படும் இரு சிறுவர்களை பற்றிய கதை என்றாலும் சொல்லப்பட்ட சில பக்கங்களுக்குள் இப்படித்தான் ஒரு முகாம் ஈழத்தில் இருக்ககூடும் என்ற ஒரு முழுமையான முகாமினை கற்பனை செய்யமுடிகிறது. இதில் வரக்கூடிய மூத்த சிறுவனும் அவனது எண்ணங்களால் பிரமிக்க வைக்கிறான் ‘’மகாராஜாவின் இரயில் வண்டி’’ என்ற முதல் சிறுகதை பதின்ம வயதில் ஒருவனுக்குள் ஏற்படும் அதிர்வுகளும் மென்மையான காதலையும் பலவருடங்கள் கடந்துவிட்ட நிலையில் எல்லோருக்குள்ளும் இப்படி ஒன்றை அசைபோட வைக்கிறது. ‘’ஐந்தாவது கதிரை’’ சிறுகதை கணவன் மனைவிக்குள் நடைபெரும் மனம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளை பேசுகிறது. கலாச்சாரங்களுக்குள் வாழ்ந்து பழக்கப்பட்ட ஒருவள் தனது மார்பகங்களில் பச்சை குத்திக்கொண்டதோடு முடிகிறது. மார்பகங்களில் பச்சை குத்தியதை படிக்கும் போது எனக்குள் படித்தபோது ஒரு வித அதிர்வு இருந்தது. ஆனால் பிறகு எனக்குள் சமாதானம் செய்து கொண்டேன் ஒரு பெண் இன்னொரு பெண்ணிற்கு பச்சை குத்தியிருக்கலாம் என்று. ‘’கடன்’’ சிறுகதை சிங்கப்பூரின் நிரந்தவாசிகளுக்கு பொருந்திப்போகக்கூடிய ஒன்று. முதுமையில் தனித்தலையும் ஒருவரின் ஏக்கங்கள் மற்றும் வாழ்வின் அன்றாட வாழ்க்கை சிக்கல்களோடு அந்த முதியவரை சாகடிப்பதுடன் முடிகிறது. கொம்புளான, தொடக்கம் , அம்மாவின் பாவாடை, பட்டம் , ராகுகாலம் என்று இன்னும் சில கதைகளை பற்றி எழுத நினைத்திருந்தேன். குறிப்பு தொடக்கம் சிறுகதை பற்றி அங்கு விவாதிக்கப்பட்டது. நண்பர் பாலுமணிமாறனுக்கு அத்தகைய அனுபவம் ஒன்று ஏற்பட்டது. அதனை உங்களோடு பகிர்ந்துகொள்வார்.