நவம்பர் வாசகர் வட்டம்
நவம்பர் மாத வாசிப்புக்கென 'ஆதவனின் காகிதமலர்கள்' நாவலும், சிங்கை எழுத்தாளர் மாதங்கியின் 'பெரிதினும் பெரிது கேள்' சிறுகதையும் தெரிவு செய்யப்பட்டது.
முதலில் காகிதமலர்கள் குறித்தான விமர்சனங்களையும், பின்னர் மாதங்கியின் சிறுகதையை வெளியிட்டு அதன் விமர்சனங்களையும்
பதிவு செய்யலாம் என்று இருக்கிறேன்.
@@@
2 மறுமொழிகள்:
கொஞ்சம் விளங்கவில்லை எனக்கு...
நண்பரே எது விளங்கவில்லை, அறிவிப்பா? விமர்சனங்களா?
சிங்கப்பூரில், இலக்கியத்தோடு தொடர்ந்து, பரிச்சியத்தில் இருக்கவும், வாசிப்பு அனுபவங்களை மேம்படுத்திக் கொள்ளவும், வேண்டி இரு மாதங்களுக்கு ஒரு முறை முன் கூட்டியே தீர்மானித்த ஒரு புத்தகத்தின் மீது ஒரு கலந்துரையாடல் நடைபெறும், அங்கே வாசிக்கப் பட்ட கட்டுரைகளை, நான் இந்த வலைப்பூவில் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறேன். அந்த நூல்களை வாசித்திருக்கும், மற்ற இணைய வாசகர்கள், இன்னமும் ஆழங்களையும், பரிமாணங்களையும் சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில்.
இவை எல்லாம், நல்ல இலக்கியங்களை கற்க விரும்பும் யாருக்கேனும் உதவக்கூடும் என்ற நப்பாசையில்(கவனிக்கவும், நவீன என்ற வார்த்தை உபயோகிக்கப்படவில்லை)இவ் வலைப்பதிவு இயங்கி வருகிறது.
வாசகர் வட்டம் என்பது எங்களின் குழுவிற்குப் பெயர், சிங்கப்பூரின் தேசிய நூலகம் எங்களின் இம் முயற்சிகளுக்கு மிகுந்த ஆர்வமும், ஒத்துழைப்பும் நல்கி வருகிறது.
interactions அதிகமாக இல்லாததும், இரு மாதங்களுக்கு ஒரு முறை சோம்பல் முறிப்பதுமே இவ் வலைப்பூவின் இப்போதைய நிலை.
Post a Comment
<< முகப்பு