பொன்.இராமச்சந்திரன் -மகாபாரதத்தில் பெண்ணியம்
பொன். இராமச்சந்திரன் - மகாபாரதத்தில் பெண்ணியம் நாடகம் குறித்து
பழங்காலக்கதைகள் எனில் அதில் மிகைப்படுத்திச் சொல்லப்படும் கதாநாயக, நாயகிகளாக சனாதனக் கும்பல்கள் எனச் சொல்லப்படும் அரச, அரசியரை மையப்படுத்தியே கூறப்பட்டுள்ளது. ஆனால் 'மகாபாரதத்தில் பெண்ணியம்'' என்ற இரு நாடகங்களைப் படிக்கும் பொழுது, பெண்ணியத்தைப் பற்றி வித்யாசமான சிந்தனைகள் எப்படியும் இருக்குமென்று நினைத்துப் படிக்க ஆரம்பித்தேன். அரசியல், சமூக ஈடுபாடுகள் குறித்து பெண்களின் அக்கரையைத் தெரிந்து கொள்ளலாம் என எண்ணினேன். மாறாக இவ்விரு நாடகங்களிலும் பெண்ணியம் என்பது பாலியலைத் தவிர சொல்வதற்கு ஏதுமில்லை என்பது போல நாடகம் சித்தரிக்கப் பட்டுள்ளது. இந்த இரு நாடகங்களும் தற்போதைய திரைப்படத் தயாரிப்பாளர்களின் கையில் கிடைத்திருந்தால் பணம் கொட்டும் பெரிய வெள்ளி விழாப் படமாக " மக்களின் ரசனை" என்ற பொய் பிரச்சாரத்துடன் வெளியே வந்திருக்கும்.
முதல் நாடகமான அஸ்தினாபுரம் என்ற நாடகத்தில் பாலியல் போக்குடன் கதை சென்ற போதும், 'சுபா' என்ற பாத்திரத்தின் மூலம் சில அரிய அரசியல் உண்மை, பெண்ணுரிமைச் சிந்தனைகளைத் தெரிந்தெடுத்துள்ளார், நாடகாசிரியர் நந்தகிஷோர் ஆச்சாரியா. ஆங்கே அரசகுலம் என்பது ஒர் ஆணின் குலம் சார்ந்தே உருவாக்கப்படுகிறது. அந்தக் கருத்தைத் தட்டிக் கேட்கும் ஒரு நாடகப் பாத்திரமாக சுபாவைச் சித்தரிக்கிறார். மேலும் தனது மகன் விதுரர் அரசுரிமையிலிருந்து ஏன் வஞ்சிக்கப் பட வேண்டும் என்று தான் வாழ்ந்த யதார்த்த உண்மைகளைக்கொண்டு விளக்குகிறார், இங்கு ஆணின் குலத்தை சார்ந்தே அரசகுலம் அமையவேண்டும் என்ற ஆணின் ஆதிக்க வர்க்கத்தை, பெண்ணியத்திற்க்கும் உரிமை உண்டு என்ற சிந்தனையால் எதிர்கொள்கிறார். அரசியலைப் பற்றிக் குறிப்பிடும் போது, சத்யவதி கூறும் கருத்தான, "மக்கள் வம்சப் பரம்பரையைத்தான் விரும்புகின்றனர். அதில்லாமல் மக்களால் அரசனை மதிக்க முடிவதில்லை." என்று கூறும் போது, சுபா, "ஏன் என்றால் அவர்களுக்கு இது போல்தான் கற்பிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் தான் அரசவன்சத்தின் நலன்கள் பத்திரமாகக் காப்பாற்றப் படுகிறது." என்று கூறுகிறார். இது நாம் கவனிக்க வேண்டியா ஒரு உயரிய சித்தாந்தம். இக் கருத்து ஒரு பெண்ணின் மூலமாக வெளிப்படும் போது, இந்த மாதிரியான அரசியல் தெளிவுள்ள பெண்கள் இருந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியப் பட வைக்கிறது. இக்கருத்து இன்றைய அரசியல் சூழலுக்கும், ஒரு பலத்த் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறது.
தர்க்க ரீதியாகவும் அங்கு அந்தப் பெண்மை தன் தெளிவான அறிவின் மூலம் பீஷ்மரையும் விஞ்சி நிற்கிறாள்.
பெண்களின் பாலியல் சம்பந்தமான கருத்துகளில் அம்பிகா கூறுவதாக இப்படித்தரப் படுகிறது." விருப்பமென்பது தர்மத்திற்கு விரோதமானதாக இருந்தால் அது உசிதமற்றதுதான். ஆனால் தர்மம் கட்டாயபூர்வமாக விருப்பத்திற்கு எதிரானதாக இருப்பதில்லையே! இதைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? மேலும் இதுதான் தர்மமா? தன் விருப்பமின்றித் தன்னைப் பிறருகு அளிப்பதா தர்மம்? இது பலாத்காரமன்றி வேறென்ன" என வினவுகிறார். இப்படி இந்தக் கருத்து ஒருபுறம் இருக்க குந்திக்கோ, தன் தேவைக்கேற்றவாறு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் நிலை இருந்ததாகவும் கூறுகின்றார். இப்படிப் பார்க்கும் போது இவர் எதைப் பற்றி கூறுகிறார் என்பதும், தான் கூறும் பாலியல் கொடுமைப் பற்றிய கருத்தில் காமத்தைத் திணிக்க ஒரு தடுமாற்றம் இருப்பதாகவே கருதுகின்றேன்.
**********
நாடகத்திலிருந்து நான் அறிந்து கொண்டவை இரண்டு.
ஒன்று அரசாள்வதற்கு ஆண்தான் அவசியம் என்ற கருத்துக்கு எதிராக எந்தப் பெண் கதாபாத்திரமும் படைக்கப் படாமல் இருப்பது ஆண் ஆதிக்கத்தினால்தான்!
இரண்டு, ' பெண்ணின் கற்பே மிகப் பெரிய பாரதப் பண்பாடு' என்று சமயவாதிகளும், சிந்தனாவாதிகளும் பல நூற்றாண்டுகளாகவே கோஷம் போட்டு வரும் நமது 'பாரதப் பண்பாடு' இந்த நாடகத்தைப் படிக்கும் போது ஒரு கேள்விக்குறியே.
நாடகத்தில் குறிப்பிட்டது போல், 'நியோக்' போன்ற நடைமுறைப் பழக்கங்களும், தர்மம் என்ற போர்வைக்குள் முறை கேடான உறவுமுறைகள், திருமணத்திற்கு முந்தைய உடலுறவுகளை எல்லாம் பார்க்கும் போது, 'பாரதப் பண்பாடு' என்ற கோட்பாட்டையே நீக்கி விடலாம் என்பது எனது கருத்து.
***********
1 மறுமொழிகள்:
ரமேஷ்,
புத்தகத்தைப் படிக்காமல், இவைகளை உள் வாங்கிக் கொள்ள சிறிது கடினமாய் உள்ளது. இன்னும் ஒரு
மகாபாரத அலசல், ஐராவதி கார்வேயின் "யுகந்தா" படித்திருக்கிறீர்களா? சாகித்ய அகாதமி பரிசு பெற்றது.
மகாபாரதத்தில் என்னை கவர்ந்த பாத்திரம் துரெளபதி. எக்காலத்திலும் ஒவ்வாதது என்பது அவளின் ஐந்து கணவர்களே. ஆனால் அவளின் குணாதிசியங்கள் அனைத்தும் சாதாரண பெண் போலவேதான் தொடர்ந்து உங்கள் பதிவைப் படித்து வருகிறேன். தொடருங்கள்
Post a Comment
<< முகப்பு