செவ்வாய், மே 23, 2006

ஏப்ரல் மாதத்திற்கான வாசிப்பு

நண்பர்களே முன்னரே அறிவித்தபடி வாசகர்வட்டத்தின் போன கூட்டம் ஏப்ரல்16,2006 ஞாயிற்றுக்கிழமையன்று, சிங்கப்பூரின் அங்-மோ-க்யோ நூலகத்தின், ‘தக்காளி ஹாலில்’ (Tomato hall) நடைபெற்றது. மெல்லமெல்ல பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை கூடிவருவது மகிழ்ச்சிக்குறியது!

வாசிப்பு அனுபவத்திற்கான புத்தகமாக இரு நாடகங்களைக் கொண்ட, நந்தகிஷோர் ஆச்சாரியாவின், “மகாபாரதத்தில் பெண்ணியம்” தெரிவு செய்யப்பட்டிருந்தது. ஹிந்தியில் இயற்றப்பட்டிருந்த இந்த நாடகத்தை திருமதி, சரஸ்வதி ராம்நாத் அழகான தமிழில் மொழிபெயர்த்திருந்தார்.
அதில் வாசிக்கப் பட்ட விமர்சனக் கட்டுரைகளை வலையேற்றுகிறேன், உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.