நேற்றிருந்தோம் 12-10-2008 , மாலை 4:30 க்குத் துவங்க இருக்கும் கூட்டத்திற்கான அழைப்பு:
நவீன வாழ்வினில் சகமனிதனுக்கான ஈரம் வற்றிப்போய்க் கொண்டிருப்பதைக்கூட பொருட்படுத்த தவறுகிறோம். (மனிதனாய் வாழமுடியாத கணங்களின் குற்றபோதம் முள்ளாய் தொடர்ந்து உறுத்த எப்படி வாழ்வது?)
@ @ @ @
பாட்டி கதைகளின் வழியாக நமக்குள் திறக்கும் ரகசியக் கதவுகளுக்கான சாவியை தின வாழ்வின் அவசரத்தில் தொலைத்து விட்டதில், முடிவற்ற பாலையின் நெடும் பயணமாய் இவ் வாழ்க்கை...
@ @ @ @
சரித்திரம் அதை வாழ்ந்து பார்த்தவனின் வழியே பல திறப்புகளைக் கொண்டதாய் இருக்கிறது,
பாட புத்தகங்களின் வழியே அரசர்களின் சவக்கிடங்குகள் கொண்ட மயானம் தெரிகையில், சாமான்யர்களின் இதயத்திற்குள்ளிருந்து அபூர்வ மந்திரக் குளிகைகளும், மூளையின் புராதான மடிப்புகளுக்கிடையில் மறந்த பொக்கீஷங்கள் சிதறிக் கிடக்கின்றன. சில வழிகள் பாட்டிக் கதைகளுக்கான கதவுகளின் பாதையாகவும், சில நம்மிதயத்தின் கசிந்திருக்கும் காயங்களுக்கான குளிகைகள் தயாரிக்கும் மூலிகை காடுகளுக்கான பாதைகளுக்கானதாகவும் விகசிக்கின்றன...
@ @ @ @
வாழ்க்கையின் பலநிலைகளில் கடந்த காலத்தை வாழ்ந்து அனுபவித்த மனிதர்கள், தங்களின் சிங்கப்பூரை விவரிக்கும் நிகழ்ச்சியான, "நேற்றிருந்தோம்" நிகழ்ச்சியின் அக்டோபர் மாதத்திய கூட்டத்தில் திரு.பொன்.சுந்தரராசு தம் நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்வார்,
சிறந்த கல்வியாளரும், இலக்கியவாதியுமான அவரது உலகத்தையும், அவரது சிங்கப்பூரையும், நாம் இதன் வழியே அறிந்து கொண்டு நமக்கான வரலற்றையும், நம்முடைய சிங்கப்பூரையும் உருவாக்கிக்கொள்ளலாம்.
@ @ @ @
1 மறுமொழிகள்:
வணக்கம் அண்ணா.
அய்யனாரின் வலைப்பக்கம் சென்று ஜே.பி.சா வை பார்த்து வா.வ சுட்டியை இணைத்தபின்புதான் பிற பின்னூட்டத்தையும் பார்த்தேன். எனக்கு முன்பே உங்களின் பின்னூட்டம் இருந்தது. எதிர்வரும் சந்திப்பிற்கு ஆவலாக இருக்கிறேன்.
Post a Comment
<< முகப்பு